Categories
தேசிய செய்திகள்

“பெண் குழந்தைகள் சுமை அல்ல வரம்”… பெண் குழந்தை பிறந்ததற்காக…. பானிபூரி வியாபாரி செய்த செயல்…!!!

பெண்குழந்தை பிறந்ததற்காக போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி மக்கள் அனைவருக்கும் இலவசமாக பானி பூரியை வழங்கியுள்ளார்.

நம் உலகம் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் சில இடங்களில் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். பானிபூரி வியாபாரம் செய்பவரின் பெயர் அஞ்சல் குப்தா. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் அஞ்சல் குப்தா பானி பூரியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். மேலும் 50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரியை ஊர் மக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்ற பேதம் இருக்கக்கூடாது. அனைத்து மக்களும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் தனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் பானிபூரி இலவசமாக வழங்கியுள்ளேன். எனது உறவினர்கள் சிலர் பெண் குழந்தை பிறந்தால் பொருளாதார சுமை ஏற்படும் என்று கூறினார்கள். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |