Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி”….. விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்….!!!!!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை போலீசார் நடத்தினார்கள்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் கிராம மக்களிடம் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட்டர் மருதமுத்து, போலீஸ் உமா உள்ளிட்டோர் சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் கூறியதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஒவ்வொரு காவல் நிலையத்தில் செயல்படும். பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசியின் நோக்கி 181 குறித்தும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூற 1098 என்ற இலவச தொலைபேசி எண் பற்றியும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவியின் 14417 பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

Categories

Tech |