பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, கல்யாணப்பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2019-ஆம் ஆண்டு அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என ஸ்ரீதேவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.