பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான கன்யான் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று கன்யான் பாலிசி திட்டம். இதில் தினமும் 121 ரூபாய் சேமித்தால் போதும் முதிர்வு காலத்தில் உங்களுடைய கையில் ரூபாய் 25 லட்சம் வரை இருக்கும். பெண் குழந்தைகளின் திருமணத்தை பெற்றோர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் நடத்துவதற்கு உதவுவதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தையின் ஒரு வயதுக்கு பிறகு இந்த பாலிசி அவர்களது பெயரில் எடுக்கலாம். பெற்றோருக்கு குறைந்தபட்சம் 30 வயது ஆகியிருக்க வேண்டும். இந்த பாலிசி மொத்தம் 25 ஆண்டுகள் வரை இருக்கும். ஆனால் 22 ஆண்டுகள் மட்டுமே பிரீமியம் செலுத்தினால் போதும். ஒருவேளை பாலிசிதாரர் பாலிசி காலத்திலேயே இறந்து விட்டால் மீதி இருக்கிற பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்த தேவையில்லை.
விபத்து காப்பீடாக ரூபாய் 10 லட்சம் வரையில் வழங்கப்படும். வேறு வகையிலான மரணமாக இருந்தால் 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த பாலிசியில் மாதத்திற்கு ரூ 3,600 செலுத்தினால் போதும். அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு ரூ. 121 ஒன்று மட்டுமே பாலிசி முதிர்வு காலத்தில் 27 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இதனை வைத்து மகளின் திருமண நிகழ்ச்சியை நடத்தலாம்.