Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களே…. உங்கள் குழந்தை பெயரில் ரூ.50,000….. தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!

ஆண் குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக ஊக்குத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குடும்ப வருமானம் 72000க்கும் மேல் இருக்கக் கூடாது. குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பெயரில் 50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இரு பெண் குழந்தைகள் இருந்தால் 25 ஆயிரம் இருப்பு வைக்கப்படும். ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒரு முறையும் இந்த வைய்ப்பு நிதி புதுப்பிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைந்த உடன் வைப்பு தொகை மற்றும் அதற்கான வட்டி அந்த பெண்ணுக்கு வழங்கப்படும். மேலும் வைப்புத்தொகையில் இருப்பு வைக்கப்பட்ட ஆறாவது வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடத்திற்கும் ரூபாய் 1800 அந்த பெண்ணிற்கு தொகையாக வழங்கப்படும்

Categories

Tech |