சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அன்னபூரணி என்ற பெண் திடீரென்று தான் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று திடீர் பெண் சாமியாராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பல கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நம்மாழ்வார் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னபூரணி பெண் என்றால் அவரை திரும்ப திரும்ப பேசி காயப்படுத்தி கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் ஆண் நல்ல சாமியார். பெண் என்றால் கெட்ட சாமியாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.