தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க தனி குழு அமைக்கப்படும் என்று சமூக பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முந்தைய காலத்தில் தான் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போதும் பல இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதனை கொலை செய்வதும், தூக்கி எறிவதும் நடைபெற்றுவருகின்றது. உலகம் விஞ்ஞான அளவில் பெரிதளவு சாதித்தாலும் இன்னும் இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் காலகட்டத்தில் இன்னும் பல இடங்களில் பெண் பெண் சிசுக்கொலை தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.
இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக சமூக பாதுகாப்பு அமைச்சர் கீதாஜீவன் தனி குழு ஒன்றை அமைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 1098, 1091,144, 181 ஆகிய நான்கு டோல் பிரீ எண்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ,பெண் சிசுக்கொலை அதிகம் பதிவாகியுள்ள உசிலம்பட்டியில் விழிப்புணர்வு செய்து கண்காணிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.