மதுரை உசிலம்பட்டி அருகே பெரியகட்டளையில் பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகம் எழுதியது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று முன்தினம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர். இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா தலைமறைவாகினர் .
அவர்களை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் வைத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் இப்படி செய்ததாக தெரிவித்துள்ளனர்.