திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தாய் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் மும்பையில் இரயில்வே டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேளானந்தலை பகுதியை சேர்ந்த விவசாயியான கருப்பையா என்பவர் தமில்செல்வியை திருமணம் செய்து கொள்வதற்காக பெண் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வியின் தாய் அசலாம்பால் மறுத்துள்ளார்.
இந்நிலையில் கருப்பையா சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வியின் தாயையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தியாகதுருகம் காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்துள்ளனர்.