விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கொத்தனாரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் கார்த்திகை செல்வியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு கார்த்திகை செல்வி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் முருகனுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதமும்,10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.