பெண் தவறவிட்ட மணிபர்சை நகை, பணத்துடன் மீட்டு கொடுத்த காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டினார்.
கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகில் ஆத்திரிகுப்பத்தில் வசித்து வருபவர் முருகவேல். இவருடைய மனைவி 50 வயதுடைய அஞ்சுலட்சுமி. இவர் நேற்று காலை முத்தாண்டிக்குப்பம் கடைவீதிக்கு காரில் சென்றார். அப்போது காரிலிருந்து இறங்கி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 பவுன் நகை மற்றும் ரூ 2500 வைத்திருந்த பர்சை தவற விட்டார். இதனால் பதறிப்போன அவர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இத்தகவலின்பேரில் முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து ஆய்வு செய்தார்கள்.
அப்போது அந்த ஆய்வில் அஞ்சுலட்சுமி தவறவிட்ட பேர்பெரியான்குப்பத்தில் வசித்த 52 வயதுடைய முருகன் என்பவர் கீழே கிடந்து எடுத்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் முருகனிடம் விசாரித்தபோது அவர் கீழே கிடந்த பர்சை எடுத்ததை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரிடமிருந்து பஸ்சை பறிமுதல் செய்து காவல் துறையினர் அஞ்சுலட்சமிடம் கொடுத்தனர். பெண் தவறவிட்ட பர்சை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பாராட்டியுள்ளார்.