புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த வினோதினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் ராஜாராம் வினோதினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.