ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் இந்த பதவி மாற்றம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது ஒரு பெண் பெண் நிருபர் ஊழல் புகாருக்கு ஆளான போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் வெறும் இல் பதவி மாற்றம் செய்யப்பட்டது சரியான செயல்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு முறையாக பதிலளிக்காத அமைச்சர் அவருடைய கேமராவை தாக்கி அநாகரீகமாக நடந்துள்ளார் இதுதொடர்பாக அந்த பெண் நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் நிழலாக வலம் வந்த நடராஜனின் ஊழல் அப்பட்டமானது.
ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படாமல் பணியிட மாற்றம் மற்றும் செய்யப்பட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயமாகும். இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது . அந்த சோதனையில் பணம் என்னும் இரண்டு மிஷன்கள், ரூ.35 லட்சம் ரொக்கம், வரவு செலவு டைரி, செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. நடராஜனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சொல்லித்தான் இதை செய்தேன் என நடராஜன் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.