ஸ்காட்லாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இந்த மருந்துவரின் பெயர் கிருஷ்ணா சிங் ஆகும். இவருக்கு வயது 72 ஆகிறது. இந்த மருத்துவர் வடக்கு லனர்க்ஷைரில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1983- 2018 ஆம் ஆண்டு வரையில் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்துள்ள பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், அசிங்கமாக பேசுதல், முத்தமிடுதல் போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையை கிளாஸ்கோ நீதிமன்றம் விதித்துள்ளது. இதற்கு முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த கிருஷ்ணா சிங், நோயாளிகள் தவறான தகவல்களை அளித்துவிட்டதாகவும் இந்தியாவில் தனக்கு மருத்துவ பயிற்சியில் கற்று கொடுத்த பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், “மருத்துவத் தொழிலின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகவும் பெண் நோயாளிகளின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாகவும் கூறி அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது”.