கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப்பேருந்தில் ஏறிய பெண்ணை தரக்குறைவாக பேசி இறக்கிவிட்டார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் வீடியோ வைரலானது.
இந்நிலையில் இந்த புகாரில் பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜ் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.