Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காடுவெட்டி கொங்கம்பட்டியில் வசித்து வந்த வீரமலை(25) என்பவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமலை தனக்கு பெண் பார்க்க செல்வதற்காக அவரது நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு என். புதுப்பட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது குறிஞ்சி நகர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் வீரமலை தூக்கிவீசப்பட்டு பலத்தகாயம் அடித்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக வீரமலையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரமலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |