விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் தினம்தோறும் பரபரப்பான சண்டைகளுடன் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றன.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.அதனைப் பார்த்து அனைவரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என திட்டி தீர்த்து வருகிறார்கள். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் அவர் தனலட்சுமி தள்ளிவிட தனலட்சுமி எங்க கை வச்சு தள்ள என கோபமாக பேசி உள்ளார். அந்த காட்சியை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.