சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலுள்ள கன்னியாம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் என்பார் வசித்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு லாரி ஓட்டுனராக தொழிலை தொடங்கினார். இவர் பல ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் லோடு லாரியை இயக்கி தமிழ், கன்னடம், இந்தி மொழிகளை சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட ஜெயசங்கர் 2009 ஆம் ஆண்டில் சைக்கோ சங்கராக உருவெடுக்கத் தொடங்கினார். இவர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதில் காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலைய கான்ஸ்டபிள் ஜெயமணியும் ஒருவர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயமணி அன்று இரவு மாயமானார். அவரைக் குறித்து விசாரித்து வந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி காவல் சீருடையில் சடலமாக சங்ககிரி பகுதியில் ஜெயமணி கண்டெடுக்கப்பட்டார். அவரின் உடற்கூறு பரிசோதனையில் ஜெயமணி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வந்தனர். அதன்பிறகு அக்டோபர் 19ஆம் தேதி அவரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
மேலும் விசாரணையில் ஜெய்சங்கர் மீது ஏற்கனவே சங்ககிரி காவல் நிலையத்தில் கொலை மற்றும் பலாத்கார வழக்கு இருப்பது தெரிய வந்தது. அதுதான் முதல் குற்ற வழக்கு. அதனைத் தொடர்ந்து ஜெய்சங்கரிடம் விசாரித்ததில் காவல் நிலையங்களில் பதியப்படாத குற்ற சம்பவங்கள் செய்திருப்பதும், ஜெய்சங்கர் ஒரு பிரபலம் ஆகாத சீரியல் கில்லர் என்பதும் தெரிய வந்தது. இவர் 2008-2009 ஆம் ஆண்டுகளில் சேலம், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 13க்கு மேற்பட்ட பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி ஒரு கொலை வழக்கில் ஜெய்சங்கரை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பாதுகாப்புக்காக சின்னச்சாமி மற்றும் ராஜவேலு காவலர்கள் சென்றனர். அன்று காலை 9.30 பேருந்து நிலையத்திலிருந்து ஜெய்சங்கர் தப்பி ஓடிவிட்டார். குற்றவாளி தப்பிக்க விட்டுவிட்டோமே என்ற மன உளைச்சலில் இருந்த சின்னசாமி மார்ச் 19ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தப்பித்துச் என்ற சைக்கோ ஷங்கர் மீண்டும் தனது ஆட்டத்தை கர்நாடகாவில் தொடர்ந்துள்ளார். இவர் பெல்லரி பகுதியில் 16 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தார். அதில் சில பெண்களின் சடலங்கள் வன்புணர்வு செய்தார்.
அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 2013 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் சைகோ சங்கருக்கு ஓசூர் நீதிமன்ற 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அத்தனை பாதுகாப்பு மிகுந்த சிறையில் இருந்து சில நாட்களில் தப்பி ஓடிய ஜெய்சங்கர் கர்நாடக காவல் துறையினரை ஜெலுசில் போட வைத்தார். ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் சிலர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மாற்றப்பட்டனர். சிறையில் இருந்து தப்பிய 6 நாட்களில் பெங்களூர் போலீசார் சைக்கோ சங்கரை கைது செய்து மீண்டும் அதே சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஆறு வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 சைக்கோ ஷங்கர் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது. இந்த முறை அவர் தப்பிக்கவில்லை. சிறையில் ஷேவிங் செய்தவரிடம் இருந்த பிளேடினால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது. மேலும் 10 ஆண்டுகளாக சைக்கோ சங்கர் செய்த கொலைகளும் பலாத்கார சம்பவம் தமிழகத்தில் ஆட்டோ சங்கருக்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார் சைக்கோ சங்கர் தற்கொலை செய்து கொண்டார்.