கோவை மாவட்டத்தில் பெண்கள் போல பேசி இளைஞர்களின் ஆசையை தூண்டி பின் அவர்களின் நிர்வாண வீடியோ பெற்று பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் இதுபோன்ற கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Categories