நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட கொடூர நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சக ஊழியர்ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவரை அவருடன் பணியாற்றும் மூத்த அதிகாரி பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது பெண் மருத்துவரை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் அவரை அங்கிருந்து ஓட்டம் பிடித்து உயிர் பிழைத்துள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த அதிகாரி மீது போலீசார் கற்பழிப்புக் குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.