Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம்…. சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை…!!

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தமுடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடத்தப்பட்டது.

கடந்த மாதம் 15ஆம் தேதி வேலூரில் இருக்கின்ற தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருந்துவர் ஒருவர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்புகின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அந்தப் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி வ.உ.சி நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன்(20), 18 வயதுடைய பரத் என்ற பாரா, 22 வயதுடைய சந்தோஷ் குமார் என்ற மண்டை மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை சென்னையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். சிறுவனை தவிர்த்து மற்ற நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு 17 வயது 6 மாதங்கள் ஆகின்ற நிலையில் கொடுங்குற்றத்தில் சம்பந்தப்பட்டதால் டெல்லி நிர்பயா வழக்கின் அடிப்படையில் அவருக்கு தண்டனை கொடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்பின்  இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக  மனு கொடுக்கப்பட்டது.  அதில், பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் சிறுவன் சென்னையில் இருந்து வேலூருக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அவனை தனியார் ஆஸ்பத்திரியில் மனநல மருத்துவர் பரிசோதனை செய்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, டெல்லி நிர்பயா வழக்கில் ஒருவர் இளைநராக இருந்ததால் அவரை விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு சட்டத் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 16 வயதுக்கு மேல் 18 வயது நிறைவுபெறதாவர்கள் யாராவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களின் மனநிலை 18 வயது உடையவர்களின் மனநிலைக்கு ஈடாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்.

எனவே  வேலூர் பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமுடைய 17 வயது சிறுவனுக்கு தண்டனை கொடுக்க இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்று இனி வருகின்ற காலங்களில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை இந்த நடவடிக்கை எடுக்கிறது. மேலும் அந்த சிறுவனின் மனநிலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனநிலைக்கு ஈடாக இருப்பதாக பரிசோதனை முடிவு வந்தால் மற்ற குற்றவாளிகளை போன்று இவருக்கும் தண்டனை கொடுக்கப்படும் என்று அவர்கள்  தெரிவித்தனர்.

Categories

Tech |