மிசோரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஏலியன்களை பார்த்ததாக அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிசோரி மாநிலத்தை சேர்ந்தவர் லில்லி நோவா. இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் முதலில் ஏலியன்களை பார்த்ததாகவும் பின்பு பல நாட்கள் கழித்து மறுபடியும் பார்த்ததாகவும் தெரிவித்தார். இவர் வானவியல் குறித்த போட்டோக்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், கொரோனா லாக்டோன் காலங்களில் வானில் வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பெண்மணி கூறுகையில், “வேற்றுகிரகவாசிகளிள் ஒருவர் பெண்ணைப் போல் இருந்தார். அவர் நீல நிறத்துடன் முடியில்லாமல் மிக அழகாக இருந்தார்.மேலும் சாம்பல் நிற உடை அணித்திருந்தார். நான் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருந்த போது தான் அவைகளை பார்த்தேன். அப்போது திடீரென்று தூரத்தில் வானில் வெளிச்சம் தோன்றியது. அதனை உன்னித்து கவனித்தபோது இரண்டாவது முக்கோண வடிவிலான செயற்கைக்கோள் ஒன்று வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கண் முன்னாடியே மாயமாகி விட்டது. இது ஆச்சரியத்தை கொடுத்தாலும் பிறகு வாடிக்கையாகி விட்டது.
வேற்றுக்கிரகவாசிகள் அவர்களுடைய வடிவத்தை எனக்கு நுண்ணுணர்வு முறையில் தெரிவிக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் கண்காணிப்பது ஒரு வேலை ஏலியன்களுக்கு தெரிந்து இருந்தால் கூட என்னிடம் தொடர்பு கொள்ள விரும்புவதாக நினைக்கிறேன். மேலும் அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக எனது தொடர்பை அதிகரித்துக் கொண்டே வருகிறேன்.
இந்த அரிய நிகழ்வினால் வானவியல் போட்டோ எடுக்கும் துறையில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்காக நான் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்த என் வேலையை நிறுத்திவிட்டேன். இப்பொழுது நான் பார்த்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவித்து வருகிறேன். இதற்கிடையில் தியானத்தில் அனுபவம் நிறைந்த ஒருவருடன் நான் வெளியே சென்றேன். இருவரும் தியானத்தில் ஈடுபட்டோம். அப்போது வானில் வேற்றுகிரகவாசிகள் தோன்ற வேண்டும் என்று தியானம் செய்தோம். சிறிது நேரம் கழித்து வானில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவத்தில் தங்க நிறத்திலான ஒரு ஒளி சுற்றிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்ததும் என் கண்ணில் கண்ணீர் பெருகியது. அவர்களை நான் முழுமனதோடு நம்பி அழைத்ததால் தான் தோன்றினார்கள்” என்று அந்தப் பெண்மணி அனைவரிடமும் பீதியை கிளப்பி வருகிறார்.