ஒரு நபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் திருமணம் செய்யவில்லை என்றால் அது பாலியல் குற்றச்சாட்டில் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலின் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். இதையடுத்து இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு குற்றம் சாட்டப்பட்ட நபர் வாக்குறுதி அளித்து பின்னர் அதை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது.
இருவரின் சம்மதத்துடன் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். அப்படி இருக்கும்போது உண்மை காரணங்களுக்காக அவர் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு ஆளாக அது என்று கூறி அந்த நபர் மீது இருந்த எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.