உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண் வேட்பாளர் ஒருவரை சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைவரும் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய வந்த பெண் தொண்டர் ஒருவரை சேலையை இழுத்து மானபங்கம் படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்த பிறகு 12க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் வேட்புமனு செய்வதற்கு வந்துள்ளார்.
அவரை சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் அவரின் சேலையை பிடித்து இழுத்து உருவி மானபங்கம் படுத்தியுள்ளனர். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது தங்களது வேட்பாளர்களை தாக்கியவர்கள் பாஜக தொண்டர்கள் என்றும் யோகி ஆதித்யநாத் பதவி ஆசை கொண்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பிரதமர் மற்றும் முதல்-மந்திரி வெடிகுண்டுகள், கற்கள் மற்றும் தோட்டாக்களை பயன்படுத்திய தொண்டர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.அவர்கள் வேட்பு மனுக்களை பறித்து பத்திரிகையாளர்களை அடித்து, பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.