மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து வந்து தன்னுடைய ஒலிம்பிக் கனவை அடைந்துள்ளார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ரேவதி பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். இதைப்பார்த்த பயிற்சியாளர் கண்ணன் அவருக்கு அவரை ஊக்குவித்து அடுத்தகட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து விடாமுயற்சியோடு படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார்.
பெற்றோர்கள் இல்லாத சூழலிலும் தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த ரேவதி தன்னுடைய சொந்த முயற்சியினாலும், விடா முயற்சியினாலும் தான் நினைத்த இடத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வந்ததன் காரணமாக தற்போது அவருடைய இலக்கை அடைந்துள்ளார். இவரைப் போன்று இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி விடாமுயற்சியோடு செயல்பட்டு வந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.