Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெத்த பிள்ளைகளை இப்படி கொண்ணுட்டாளே..! கண்ணீர் மல்க கணவர் உருக்கம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கே.என்.புரத்தில் தமிழ்ச்செல்வியின் தம்பி முருகன் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தனது குடும்பத்தினருடன் பிரபு வசித்து வந்துள்ளார். அதன்பின் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபு தனியாக பிரிந்து சென்றுள்ளார். இதையடுத்து தமிழ்செல்வி அங்கேயே தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது தமிழ்ச்செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதுகுறித்து பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, எனக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடந்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நான் லாரி டிரைவர் என்பதால் வெளியூருக்கு அடிக்கடி சென்று விடுவேன்.

இதனால் எனது மனைவிக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு அவரை பிரிந்து நான் சொந்த ஊருக்கு சென்று விட்டேன். இந்நிலையில் தனது மனைவி இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் எனது மனைவியின் இந்த செயலால் தன்னுடைய இரண்டு மகள்களையும் பறிகொடுத்து விட்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |