Categories
தேசிய செய்திகள்

பெத்த மனம் இப்படியும் கல்லாகுமா….? வகுப்பில் மாணவனிடம் பேசியதால்….. சிறுமியை கொன்ற பெற்றோர்…. பரபரப்பு…!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் பப்லூ – ரூபி தம்பதிக்கு செளமியா என்ற 10 வயது மகள் உள்ளார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அனைவரிடமும் சகஜமாக பேசி வரும் இந்த சிறுமிக்கு வகுப்பில் ஆண் நண்பர்கள் அதிகம். இந்த நிலையில் சிறுமியின் தந்தைக்கு அவர் ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை கண்டித்துள்ளார். இனி வேறு ஆண்களுடன் பேசவே கூடாது என எச்சரித்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரியான அந்த சிறுமியிடம் வகுப்பில் உள்ள பலரும் சந்தேகம் கேட்பது வழக்கம்.

இது வகுப்பில் மட்டுமல்லாமல் வீட்டிற்கு வந்ததும் சந்தேகம் கேட்டதை கண்ட அவரது தந்தையும், தாயையும் இனி ஆண் நண்பர்களுடன் பழக கூடாது என கூறியிருக்கிறார். ஆனால் அவர்களை தவிர்க்க முடியாது என சிறுமி கூறி புரிய வைக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த தாய், தந்தை அந்த சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த வாரம் இரவு மகளை ஹோட்டலுக்கு அழைத்து சென்று, பின் 10 மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் யமுனா கால்வாய் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று அவரை தூக்கி கால்வாயில் வீசினர்.

இதில் தண்ணீரில் விழுந்த சிறுமி மூச்சு திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சிறுமியை கொன்ற பெற்றோரை அதிகாரிகள் கைது செய்ததோடு, சிறுமியின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |