Categories
கால் பந்து விளையாட்டு

பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்…. முதல் ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பை…. மகிழ்ச்சியில் எப்சி அணி….!!

கோவாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் சூப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணி போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதை தொடர்ந்து 1-1 என்ற விகிதத்தில் 2 அணியும் சமநிலையாக கோல் அடித்தது. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாமல் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்து முதல்முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் அதிகமாக 18 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்த ஐதராபாத் வீரர் ஒக்பெச்சேவுக்கு தங்க ஷூ விருது வழங்கப்பட்டது.

Categories

Tech |