வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க பென்சன் வாங்குவோருக்கு கடைசி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் வாங்குவோர் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று வாழ்வு சான்று. பென்ஷன் வாங்கும் நபர்கள் தொடர்ந்து பென்ஷன் பெற வேண்டுமென்றால் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். எனினும், பென்சனர்களின் நலன் கருதி இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆகவே இதுவரை வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு இன்னும் ஆறு நாட்கள் அவகாசம் உள்ளது.
எப்படி ஈசியாக தாக்கல் செய்வது என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
* நேரடியாக வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்துக்கு சென்று வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
* டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் (Digital life certificate) சமர்ப்பிக்கலாம்.
* பல்வேறு வங்கிகள் வீட்டுக்கே வந்து வாழ்வுச் சான்றிதழை பெற்றுக்கொள்கின்றன. இச்சேவையை பயன்படுத்தலாம்.
* எஸ்பிஐ (SBI) வங்கி வீடியோ வாழ்வுச் சான்றிதழ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தலாம்.