பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக ஆந்திரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பென்சன் தொகை உயர்வு திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்த பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமூக பாதுகாப்பு பென்சன் தொகை 2,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக சமூக பாதுகாப்பு பென்ஷன் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக 1570 கோடி ரூபாயை முதல்வர் வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 62 லட்சம் பேருக்கு வீட்டிற்கே நேரடியாக பென்ஷன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சமூக பாதுகாப்பு பென்சனை பொறுத்தவரை முதியோர், விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் தீவிர நோய்களால் அவதிப்படுவோருக்கும் ஆந்திர அரசு பென்ஷன் வழங்கி வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.