Categories
தேசிய செய்திகள்

பென்சன்தாரர்கள் கவனத்திற்கு…!! PPO நம்பரை திரும்ப பெற….!! எளிய வழிமுறைகள் இதோ…!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு பென்ஷன் தாராருக்கும் ஒரு தனிப்பட்ட ஓய்வுதிய கொடுப்பனவு ஆணை எண் ஒதுக்கப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கு இந்த எண் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவேளை இந்த எண் தொலைந்து விட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ இதனை திரும்ப பெறுவதற்கு சுலபமான வழிமுறைகள் பின்வருமாறு,

அதற்கு முதலில் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://www.epfindia.gov.in/site_en/index.php க்குள் செல்ல வேண்டும்.உள்ளே சென்றதும் ‘Online Services’ பிரிவில் ‘Pensioners Portal’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘Know Your PPO No’ என்பதைக் கிளிக் செய்யவும். இதில் உங்கள் பென்சன் பணம் வரும் வங்கிக் கணக்கு எண்ணை நிரப்ப வேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு ‘submit’ என்பதை கிளிக் செய்யவும். இதனை தொடர்ந்து உங்கள் PPO நம்பர் திரையில் தெரியும்.

Categories

Tech |