பென்சன் பெறும் வயது மற்றும் பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஊழியர்களுக்கான பென்சன் தொகை உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன் யுனிவர்சல் பென்ஷன் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு முன்மொழிந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பென்சன் தொகை உயர்வு மற்றும்ஓய்வு பெரும் வயது குறித்த இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டு அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி புரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திறன் மேம்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டுக்கு மத்திய மாநில அரசுகள் தேவையான கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 19.5 % பேர் ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஓய்வு பெறும் வயதையும், பென்சன் தொகையையும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.