Categories
அரசியல்

பென்சன் பணம் வாங்கும் முதியோருக்கு….. பெரிய நிம்மதி தரும் செய்தி….!!!

ஆயுள் சான்று சமர்ப்பிப்பதற்கு மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சலுகை கிடைத்துள்ளது.

பென்ஷன் வாங்கும் அனைத்து குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதை செய்யாவிட்டால் பென்ஷன் கிடைக்காது. ஆயுள் சான்றிதழ் என்பது பென்ஷன் வாங்கும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகும். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அடிக்கடி கடைசி தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி அனைத்து ஓய்வூதியதாரர்கள் 28ஆம் தேதிக்குள் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் நிறைய பேருக்கு இந்த நடைமுறையில் உள்ள சிக்கல் காரணமாக தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் மூத்த குடிமக்களுக்கு பென்சன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பென்சன் திட்டத்தில் பயன் பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஆயில் சான்றிதழ் ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |