பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் இணைக்க வேண்டும். ஏனென்றால் பிஃப் உறுப்பினர் ஒரு வேளை திடீரென இறந்து விட்டால் அவரது நாமினிக்குதான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே நாமினியை தேர்வு செய்தவர்களுக்கு இதை அப்டேட் செய்யலாம். இந்த வருடத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். கால அவகாசம் முடியும் நிலையில், நிறைய பேர் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர்.
வருமான வரியை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாவிட்டால் 10,000 ரூபாய் வரையில் அபராதம் விரிக்க நேரிடலாம். மேலும் பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக வருடம்தோறும் ஆயுள் சான்றிதல் என்ற ஜீவன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வழக்கமாக இந்த பத்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதாருடன் பிஎஃப் கணக்கை இணைக்காவிட்டால், நிறுவனம் தரப்பில் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை தொடர்ந்து கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. பிஎப் கணக்குடன் இணைக்க நவம்பர் 30 தான் கடைசி நாளாகும் ஆனால் கொரோனா தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசம் டிசம்பர்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.