Categories
தேசிய செய்திகள்

பென்சன் பெறுபவர்களுக்கு…. இப்படியொரு வசதியா?…. அதுவும் வீட்டில் இருந்தே…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பென்சன் பெறும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தப் பத்திரத்தை பென்சன் பெறும் ஒவ்வொருவரும் வருடந்தோறும் நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஏனென்றால் பெரும்பாலானோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருந்த காரணத்தினால் மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வந்த அறிவிப்பின்படி 2022 பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்குள் தாக்கல் செய்துவிட்டால் நல்லது ஆகும். ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது இப்போது எளிதான ஒன்றாகும். குறிப்பாக வீட்டில் இருந்தபடியே அந்த வேலையை முடிக்கலாம். மேலும் வீடியோ கால் மூலமாகவே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடிவும். அதாவது பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் வீடியோ கால் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு https://www.pnbindia.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். அவற்றில் ‘Online Services’ –> ‘LC submission through video KYC’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில் பஞ்சாப் நேஷனல் பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட வேண்டும். அதன்பின் டேர்ம்ஸ் மற்றும் கண்டிசன்களுக்கு டிக் கொடுத்து, ‘proceed’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனைதொடர்ந்து மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதனை பதிவிட்டு ஆதார் நம்பரையும் உள்ளிட்டு ‘proceed’ கொடுக்க வேண்டும். அதன்பின் ஆதார் சரிபார்ப்புக்கு மீண்டும் ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அதனையும் பதிவிட்டு ‘Regular Pension’ என்பதை தேர்வு செய்து ‘Submit Request For Video Life Certificate’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். இந்நிலையில் நீங்கள் வீடியோ கால் செய்ய முடியும். பின்  ‘Call Now’ –> ‘Start Calling’ கொடுத்ததும் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரியுடன் பேச முடியும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்த கேள்விகளை உங்களிடம் கேட்டு, புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். வீடியோ கால் முடிந்ததும் அது குறித்த உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ். உங்களுக்கு அனுப்பப்படும்.

Categories

Tech |