இங்கிலாந்து அரசு, பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை அதிகரித்ததால், சுமார் ஒரு லட்சம் பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரை இங்கிலாந்து அரசு பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை 65-இல் இருந்து 66-ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சுமார் 7-லட்சம் பேர் வாரத்துக்கு, 142-பவுண்ட் பென்சன் தொகையை பெற முடியாமல் போனது. இதனால் அவர்களில் 60,000 பேர், வேலையில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் பென்சன் பெறுவதற்கான வயது வரம்பு அதிகரித்ததால், இங்கிலாந்து அரசுக்கு, ஆண்டுக்கு 490-கோடி பவுண்ட் சேமிப்பானது. இதனால் சுமார் 1 லட்சம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு Fiscal Studies and Center for Ageing Better என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு, சமூக பாதுகாப்பு பலன்களை விரிவுபடுத்தும்படியாக, இந்த ஆய்வு அறிக்கை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பென்சன் வயது வரம்பு அதிகரிப்பால், குறைவாக கல்வி தகுதி பெற்றவர்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கியிருப்போர், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்த ரிப்போர்ட் கூறுகிறது. மேலும் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பதால், குடும்ப வருமானத்தில் பெரும் பங்கானது, இதற்கே செலவாகி விடுவதாகவும், இந்த ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டதால், குடும்பங்களின் பட்ஜெட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வறிக்கையானது தெரிவிக்கிறது.