தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வகையிலும் மோசடிக் கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு மக்களிடமிருந்து பணத்தை பறித்து வருகின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனைகள் தொடங்க ஆரம்பித்து விட்டதோ அந்த அளவிற்கு மோசடிகளும் அதிகரித்துவிட்டன. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி கும்பல் வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் முதியோர்கள் மற்றும் பென்ஷன் வாங்குவோரை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பரிசு விழுந்ததாக கூறி OTP மற்றும் CVV போன்ற விவரங்களைப் பெற்று வங்கியிலிருந்து பணத்தை திருடி வருகின்றனர். எனவே யாராவது தொலைபேசியில் அழைத்தால் எந்த தகவல்களையும் மக்கள் கொடுக்க வேண்டாம். இது போன்ற அழைப்பு வந்தால் உடனடியாக 9498111191 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.