Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு!… இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கு…. உடனே இதை அப்டேட் பண்ணுங்க….!!!!

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் மே 25 ஆம் தேதிக்குள் வருடாந்திர அடையாள உறுதி நடவடிக்கை (அல்லது) வாழ்க்கை சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கம்போல் ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கையானது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2022 ம் வருடம் மே 17 ஆம் தேதிவரை கிடைக்கப்பெற்ற தரவுகளை வெரிபிகேஷன் செய்ததன்படி, ஓய்வூதிய நிர்வாகக் குடையின் கீழ் வந்துள்ள ஓய்வூதியதாரர்களில் 43,774 நபர்கள் தங்களது வருடாந்திர சான்றளிப்பு நடவடிக்கையை உறுதிசெய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் ஆன்லைன் வாயிலாக (அல்லது) ஓய்வூதியம் பெறும் தொடர்புடைய வங்கியின் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்திருக்க வேண்டியவர்கள். எனினும் இன்னும் அதனைச் செய்யாமல் இருக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள் எந்த அடிப்படையிலும் தங்களது வருடாந்திர அடையாளச் சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்யாமல் இருக்கின்றனர் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருடாந்திர அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது..?

# டிஜிட்டல் ஜீவன் பிரமான் ஆன்லைன் (அல்லது) பிரமான் பேஸ் ஆப் வாயிலாக முக அடையாளங்களை உறுதிசெய்யலாம்.

# இந்த ஆப் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

SPARSH ஓய்வூதியதாரர்:

#உங்களுக்குரிய ஓய்வூதியத்தை வழங்கக்கூடிய ஒருஅமைப்பாக “பாதுகாப்புத்துறை – பிசிடிஏ அலாஹா பாத்” என்பதனை தேர்வு செய்யவும்.

Legacy ஓய்வூதியதாரர்:

# உங்களுக்குரிய ஓய்வூதியம் வழங்கும் அமைப்பாக “பாதுகாப்பு – Jt. CDA (AF) Subroto Park” (அல்லது) “பாதுகாப்பு – PCDA (P) அலஹாபாத் அல்லது பாதுகாப்பு – PCDA (கடற்படை) மும்பை” என்பதை தேர்வு செய்யவும்.

அத்துடன் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள சிஎஸ்சி சேவை மையங்களை அணுகி வருடாந்திர சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்யலாம். மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கிற DPDO அலுவலகத்தை அணுகியும் வாழ்க்கை சான்றை வழங்கலாம். இதனிடையில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இருக்கும் வங்கிகள் வாயிலாகவும் இச்சான்றிதழை உறுதி செய்யலாம். இதில் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற வருடாந்திரசான்றளிப்பு நடவடிக்கையானது அவசியமானது. இந்த நடவடிக்கையை நிறைவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கும், சலுகை அடிப்படையில் சென்றமாத ஓய்வூதியத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது

Categories

Tech |