பென்சன் வினியோக சேவைகளை தொடங்குவதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசிடம் பென்சன் விநியோகம் செய்வதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கி அனுமதி பெற்றுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற நபர்கள் கோடக் மஹிந்திரா வங்கி வாயிலாகவும் பென்சன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பென்சல் விநியோக செயல்களை தொடங்குவதற்கு கோடக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய பென்ஷன் கணக்கு அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.
பென்சன் விநியோகிக்கும் வங்கிக்கும், பென்சன் வழங்கும் ஆணையத்துக்கும், பென்சன் பெறும் நபருக்கும் இடையேயான இணைப்பாக மத்திய பென்சன் கணக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே இதுவரை பென்ஷன் பெறும் நபர்கள் கோட்டக் மஹிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கோட்டக் மகேந்திரா வங்கி வாயிலாக பென்சன் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.