Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(மே 25) கடைசி நாள்…. உடனே இத முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.இன்றே கடைசி நாள் என்பதால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மே 17 ஆம் தேதி வரை கிடைத்த தகவலின் படி SPARSH பென்ஷன் அமைப்பிற்கு மாறிய 43,774 பென்ஷனர்கள் இன்னும் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு பணி ஓய்வு பெற்ற பென்ஷனர்கள் இன்னும் பழைய பென்ஷன் திட்டத்தில் அப்படியே உள்ளனர்.

அவர்களில் 1.2 லட்சம் பேர் இன்னும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்திற்கு 58,000ராணுவ பென்ஷனர்களுக்கு பென்சன் தொகை வராமல் இருந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பென்ஷன் அனுப்பும்படி பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. அப்போது பென்ஷன் அவர்களுக்கு அனுப்பப்படாத அதற்கு முக்கிய காரணம் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்காமல் இருந்தது தான்.

எனவே வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க 2021 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கடைசி தேதி. இருந்தாலும் கொரோனா காரணமாக மார்ச் 31ம் தேதி வரை கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது. தற்போது மே 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக பென்ஷன் வாங்குபவர்கள் அனைவரும் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |