ஹரியானா அரசு, முதியோர் பென்சன் (Old Age Pension) பெறுவதில், தகுதியான நபர்களுக்கு, அவர்களது வீட்டிற்கே சென்று நேரடியாக ஒப்புதல் வழங்கப்படும் என்ற திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன்படி, இனிமேல் புதிதாக முதியோர் பென்சன் பெற தகுதியான நபர்களுக்கு, அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று, ஒப்புதல் வழங்கப்படும். இதனடிப்படையில் வயது முதியோர், வீண் அலைச்சலையும் தவிர்க்க முடியும். மேலும் ஹரியானா அரசின் அறிவிப்பானது, முதியோருக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
இதுவரையில், முதியோர் பென்சன் பெறுவதற்கு, தகுதியான ஒரு நபர் அந்தியோத்யா கேந்திராக்களுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் அடிக்கடி அலைய வேண்டியதாக உள்ளதால், இது வயது முதியோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், முதியோர் பென்சன் தொகையை பெற தகுதியான முதியோருக்கு நேரடியாக அவரவர் வீட்டிற்கே சென்று ஒப்புதல் அளிப்பதற்கான திட்டத்திற்கு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இனி அரசு அலுவலகத்துக்கு முதியோர் அலையத் தேவையில்லை.
இந்நிலையில் 60- வயதை தாண்டியவர்கள், பயனாளி மற்றும் அவரின் கணவன்/மனைவி மொத்த ஆண்டு வருமானமானது, 2 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் ஹரியானாவில், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவ்வாறு முதியோர் பென்சன் பெறுவதற்கான தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.