பென்ஷன் விதிமுறைகளை திருத்தி அமைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவரின் மாற்றுத்திறனாளி குழந்தை அல்லது உடன் பிறந்தவரும் இனி குடும்ப பென்ஷன் பெற தகுதியானவர் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது உடன் பிறந்தவர்களின் மாத வருமானம் குடும்ப பென்ஷனை காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த குடும்ப பென்சன் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ஏற்பட்டுள்ள ஊனத்தின் மூலம் அவர் வாழ்வாதாரம் பெறுவதற்கு தடையாக இருந்தால் மட்டுமே குடும்ப பென்ஷன் தரமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.