மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகத்தை கட்டவில்லை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த விவாதத்திற்கு இடையே மதுரையில் “பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்..
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, மதுரையில் பென்னிகுயிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகத்தை கட்டவில்லை.. நீங்கள் செல்வதற்கு ஆதாரம் இருந்தால் நிச்சயமாக இந்த அரசு அடிபணிய காத்திருக்கிறது.. அதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். தவறாக சொல்லக்கூடாது என்று பதிலளித்தார்..