ஓய்வூதியதாரர்கள் தற்போது 80 வயதை தொடும்போது பென்ஷன் தொகையானது 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது இந்நிலையில் பென்ஷனர் நல சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையில், 80 வயதில் பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்ஷன் தொகையை ஆண்டுக்கு 1 சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இதுகுறித்து ஓய்வூதியதாரர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இதே பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழுவும் வழங்கியுள்ளது.இந்நிலையில், மத்திய அரசு பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஆகவே இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையானது, வருடத்திற்கு 1% உயரும்.
மேலும், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவப் படிக்கானத் தொகையை (Fixed Medical Allowance) உயர்த்தி தர வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் மருத்துவப் படித்தொகை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும்,இதுபோக, 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு ஆதரவு தர வேண்டும் எனவும் பென்சனர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.