Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களே…! பணம் எடுக்க புது ரூல்ஸ்…. என்னனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!

பென்ஷன் பணத்தை எடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பென்ஷன் திட்டம் என்பது அனைவருக்கும் மிக பயன் உள்ள ஒன்றாகும்.  இது 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் 2009ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது.

முன்பு ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால், மற்றும் வயது முதிர்ச்சியின் பின், பணம் தேவைப்பட்டால் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக மட்டுமே பணத்தை எடுக்க முடியும். தற்போதைய சூழலில் கொரோனா பரவலால்  ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இத்திட்டத்தில், வேறு சில சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அவை  தேசிய பென்ஷன் திட்டத்தில் மூன்று ஆண்டுகளில் பணத்தை எடுக்கலாம். முதலீட்டாளர்கள் தங்களது பங்களிப்புகளில்  25 % மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.( டெபாசிட் தொகையில் பெறப்படும் கூடுதல் வட்டி போன்றவை இதில் கணக்கிடப்படுவது இல்லை). உயர்கல்வி, திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காகவும்  பணத்தை எடுக்கலாம்.

மேலும் பகுதி அளவு பணத்தை மூன்று முறை மட்டும்தான் எடுக்க முடியும் இவ்வாறு  பணம் எடுக்கும் போது இடையில் ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருப்பது கட்டாயமாகும். வருமான வரி சட்டம் பிரிவு 80c யின் கீழ்  தேசிய பென்சன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும். 1.50 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |