பென்ஷன் வாங்குவோருக்கு பென்ஷன் உயர்வு பற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பென்ஷன் வாங்குபவர்களுக்கு அகலவில்லை நிவாரணம் மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக மார்ச் 30ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அகலவிலைபடியும், அகல விலை நிவாரணமும் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
அதனால் லட்சக்கணக்கான பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்நிலையில் அதலவிலை நிவாரணத்தை உயர்த்துவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விட்டதாக மத்திய பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பென்ஷன் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்த அகவிலை நிவாரணம் உயர்வு கிடைக்கும்?
* சிவில் மத்திய அரசு பென்சனர்கள்/குடும்ப பென்சனர்கள்
* அனைத்திந்திய சேவை ஓய்வூதியதாரர்கள் (All India Service)
* ரயில்வே பென்சனர்கள்/குடும்ப பென்சனர்கள்
* தற்காலிக பென்சன் பெறுவோர்
* பர்மா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த சிவில் பென்சகர்கள்/குடும்ப பென்சனர்கள்
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நீதித் துறை சார்பாக தனி அறிவிப்பு வெளியாகும் என மத்திய பென்சனர் நலத்துறை தெரிவித்துள்ளது.