பென்ஷன் பணம் விவகாரத்தில் 90 வயது மனைவியை 92 வயது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் அப்ராயம்மா தம்பதியினர். 92 வயதான சாமுவேலும் 90 வயதான அப்ராயம்மாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் தனது மனைவிக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாநில அரசால் வழங்கப்படுவதால் அதனை ஒவ்வொரு மாதமும் சாமுவேல் நேரடியாக சென்று வாங்கி வருவார்.
அதன்படி இந்த மாதத்தில் பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக தனது மனைவி வீட்டிற்கு சாமுவேல் சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த சாமுவேல் தனது வாக்கிங் ஸ்டிக் வைத்து மனைவி அப்ராயம்மாவை கடுமையாக தாக்கி கொலை செய்தார். இதனை அடுத்து தனது மகன்களுக்கு தொலைபேசி மூலமாக தன் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறினார்.
ஆனால் அவர்கள் முதலில் அதனை நம்பாமல் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் பாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு சாமுவேலை கைது செய்தனர்.