தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 14 சதவீதத்தை அரசாங்கமும், 10 சதவீதத்தை ஊழியரும் பங்களிக்கிறார்கள். அரசு வழங்கக்கூடிய பங்கில் ஊழியர்கள் பங்களிப்பும் சேர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசாங்கத்தால் 2500 கோடியும், ஊழியர் தரப்பில் இருந்து 1,500 கோடியும் பங்களிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆண்டுகளில் இந்த தொகையானது 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விரைவில் மாநில அரசு அவர்களின் தேசிய பென்ஷன் திட்ட நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்க உள்ளது. 2005ஆம் ஆண்டுக்கு பிறகு சேவையிலிருந்து அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் தேசிய பென்ஷன் திட்டத்தின் பலனை பெற வில்லை. அந்த விவகாரம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது. கூடவே 4 முதல் 5 நாட்களில் இதற்கான தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முடிவால் சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த பென்சன் திட்டத்தில் கழிவை சேர்க்க,ஊழியர்கள் முதலில் எந்த மாதத்தில் தங்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப் படுவதில்லை என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கருவூல அலுவலர் ஆல் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அவர் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு முதல் ஐந்து நாட்களில் தேசிய பென்ஷன் திட்ட நிலுவைத் தொகை ஊழியர்களின் கணக்கில் வந்துவிடும்.