தேசிய பென்ஷன் திட்டம் உங்கள் பணத்தை பெருக்கி எதிர்காலத்தில் பென்ஷன் பலன்களை வழங்க உதவியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி சலுகைகளும் பெற்றுக்கொள்ளலாம். எனவே தேசிய பென்ஷன் திட்டத்திற்கு இளம் முதலீட்டாளர்கள் உள்பட பல தரப்பினர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மேலும் இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும். தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாவது முதலீடு இருக்க வேண்டும். நீங்கள் பணி ஓய்வு பெறும்போது தேசிய பென்ஷன் திட்டத்தின் கணக்கில் உள்ள சுமார் 60 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மீதமுள்ள தொகை மூலம் வருமானம் கிடைக்கும்.
நீங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) முதலீடு செய்திருந்தால் உங்கள் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
https://www.cra-nsdl.com/CRA என்ற இணையதளத்துக்கு செல்லவும்
* User ID இடத்தில் PRAN நம்பரை பயன்படுத்தி, Password பதிவிட்டு உள்ளே நுழையவும்.
* அதில் உள்ள ‘Transaction Statement’ பகுதிக்கு செல்லவும்.
* Holding Statement பட்டனை கிளிக் செய்யவும்.
* உங்கள் தேசிய பென்சன் திட்ட கணக்கில் உள்ள தொகையை நீங்கள் பார்க்க முடியும்.
இதுமட்டுமல்லாமல், உமாங் ஆப் (UMANG App) உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து அதன் மூலமாகவும் NPS பேலன்ஸ் தொகை பார்த்துக்கொள்ளலாம்.