ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நாடு முழுதும் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்கி வருபவர்களுக்கு புது விதிகளை அறிவித்து இருக்கிறது. முன்பே சில நாட்களுக்கு முன் புது மாறுதல்களை அமல்படுத்திய தேசிய ஓய்வூதிய ஆணையம், இப்போது நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்காக POPஸ்கு (பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்) ஆதரவளிக்கும் அடிப்படையில் தன் கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முழு விபரங்களை தெரிந்து கொள்வோம். டி-ரெமிட்டன்ஸ் (Direct remittance) என்ற புது அம்சம், ஓய்வூதிய அமைப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள், தாங்களே வழங்கும் பங்களிப்புகளை மேற்கொள்ளலாம்.
இதற்கு சந்தாதாரர்கள் தங்களது PRAN எண்ணுடன் ஒரு ஸ்ட்டாடிக் விர்ச்சுவல் ஐடியை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைத்து இருந்தால், தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பென்ஷன்கணக்குக்கு வாலண்டியராக பங்களிக்கலாம். POPஸ் (Point of Presence) என்பவர்கள் பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவும் விதமாக அவர்களுடைய பரிவர்த்தனைகளை எளிதாக்கி தடை இல்லாமல் செயல்படுத்த உதவுபவர்களைக் குறிக்கிறது. மேலும் பென்ஷன்திட்டத்தில் சந்தாதாரர்களை சேர்க்கவும், அவர்கள் ஓய்வுதியக் கணக்குக்கு தொடர்ந்து பங்களிப்பதையும் உறுதிசெய்கிறார்கள்.
இந்த POP-களை ஊக்குவிக்க ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய பென்ஷன் சேவை வழியே கமிஷன் வழங்க அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதிநிர்வாகி, PoPகளால் ஆன்போர்டு செய்யப்பட்ட சந்தாதாரர்கள், டி-ரெமிட்டன்ஸ் வழியே தேசியபென்ஷன் திட்டத்திற்கு வழங்கப்படும் பங்களிப்புகள், ஆன்லைன் பங்களிப்புக்கு சமமாக கருதப்படும் என தெளிவுபடுத்தியுள்ளார். இதுவும் மற்றொரு வகையிலான ஆன்லைன் பங்களிப்புதான். eNPSஉடன் ஒப்பிடும்படி தொடர்பு உள்ள சந்தாரர்கள் மேற்கொண்ட டி-ரெமிட்டன்ஸ் பங்களிப்புகளில் அந்தந்த POP-களுக்குரிய கமிஷனானது 0.20 % நன்கொடையாக இருத்தல் வேண்டும்.
இந்த டிரைல் கமிஷன் குறித்து வெளியாகிய அறிக்கையில் “POPகள் தேசியபென்ஷன் திட்டத்துக்கு தீவிரமாக உழைத்து வருகிறார்கள். NPSன் திட்டத்தில் பயனர்களை சேர்க்கவும், அவர்கள் தொடர்ந்து கணக்கு வைத்திருக்கவும் POP-கள் மேற்கொள்ளும் முயற்சியானது பாராட்டுக்குரியதாக இருக்கிறது. ஆகவே அவர்களுடைய கணிசமான பங்களிப்புக்கும், உழைப்புக்கும் வெகுமதி கொடுக்கும் விதமாக செப்டம்பர் 1, 2022 முதல் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். இந்த டிரைல்கமிஷனின் eNPS-ற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு போன்றே, டி-ரெமிட்டன்சும் இருக்கும். PFRDA ஜனவரி 31, 2022 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் POP-களுக்குரிய கட்டண அட்டவணை வழங்கப்பட்டு இருக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.